‘தாழையூத்து ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. கிருஷ்ணவேணி மீது கொலை வெறித் தாக்குதல்; சமூக அக்கறை கொண்ட கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், ஜூன் 18-19, 2011, ஆகிய தேதிகளில் மேற்கொண்ட கள ஆய்வு’ அறிக்கையிலிருந்து
Excerpted from the report on ‘Murderous attack on the Thalaiyuthu Panchayat President Mrs. Krishnaveni; Investigative field visit conducted by Collective of Socially Concerned Academicians, Writers and Human Rights Activists – Tirunelveli – on June 18-19, 2011’
“நான் பொறுப்பேற்றதிலிருந்தே பல பிரச்சனைகள், தெரு பிரச்சனை, ரோடு, தண்ணீர் பிரச்சனை, வீடு ஒதுக்கீடு பண்றது எல்லாமே பிரச்சனை தான். கூட்டமே நடத்த விட மாட்டாங்க. காவல்துறையின் உதவியுடன் தான் கூட்டமே நடத்துவேன். காவல்துறையிடம் புகார் மனு கொடுத்தாலும் உடனே நடவடிக்கை எடுக்க மாட்டாங்க. அவசரம்னு போன் பண்ணி கூப்பிட்டாலும், உடனே வரமாட்டாங்க. பால்துரை இன்ஸ்பெக்டர் எந்தப் புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்கமாட்டார். ஆனா மற்றவர்கள் கூப்பிட்டால் உடனே வருவார். குடியரசு தினம் அன்னிக்கு கொடியேத்திவிட்டு கிராம சபைக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்து கொண்டு இருக்கும் போது துணை தலைவர் அவருடைய பினாமி ஆள் மூலம் இடது கையை பின்னால் திருப்பி முறுக்கி ஓடிச்சு விட்டார். பால்துரை இன்ஸ்பெக்டருக்குத்தான் போன் பண்ணினோம் வரவே இல்லை. அப்புறம் இதே ஆச்பித்திரியில்தான் வந்து சிகிச்சை எடுத்துக்கிட்டேன். ஆதித்தமிழர் பேரவை தான் வந்து ஆர்ப்பாட்டம் பண்ணினாங்க. ஏழைப்பேச்சு அம்பலம் ஏறலை. நம்ம சொல்றது எதையுமே கேட்க மாட்டாங்க.
From the day I took charge, there have been many problems, problems within streets, roads, water problems, housing allocation, everything was a problem. They would never let me conduct meetings. I had to hold meetings only with the help of the police. Even if I gave a complaint with the police, they wouldn’t take action immediately. Even if I phone and call for an emergency, they won’t come immediately. Inspector Paldurai would never take action for whatever complaint I gave him. If others called, he would come immediately. On Republic Day after the flag hoisting, I was making arrangements for the Village Council meeting, when the vice-president’s representative came and twisted my left arm over my back and broke my arm. We called Inspector Paldurai only, he never came. We came to this same hospital for treatment. The Athithamilar Peravai held a protest. The speech of the poor did not climb into the open. They will never listen to anything we say.
வெட்டும் போது ஏதாவது சொல்லி வெட்டுனாங்களா?
Did they say anything when they were attacking you?
பேசவே விடலை. தாறுமாறா தாறுமாறா வெட்டுனாங்க. அங்க ஒரு கழிப்பறை கட்டப் போறோம். ரொம்ப நாளா போராடி ஒரு கழிப்பறை கட்டப் போறாம். சுப்பு கோனாரு அண்ணன் பையன் ஆவுடையப்பக் கோனார் நாடார் பையன்களை brain wash பண்ணி கூட்டிட்டு வந்தாங்க. அன்னிக்கு ரொம்ப நேரமாயிட்டு ஆபீஸ்ல வேலை முடிய. 9.30 மணி ஆயிட்டு மறுநாள் ஜமாபந்தி இருந்ததுனால old age pension, அப்புறம் பட்டா, ரேஷன் கார்டு எழுதி கொடுத்திட்டு இருந்தேன். மாமா வேர இரவு வேலைக்கு போயிட்டாங்க. எனக்கு அன்னைக்கு periods வேறு. அதனால் என்னால் நடக்கவும் முடியலை, தலை சுத்தலா இருந்தது. அதனால ஆட்டோல போகலாம்னு சொல்லி கிளம்பினேன்.
They did not let me talk at all. They hacked at me blindly, from all directions. We were going to build a toilet. After a long struggle, we were going to build a toilet. Subbu Konar’s elder brother’s son Avudaiyappa Konar had brainwashed the Nadar boys and brought them along. That day, it had taken a long time for work at office to get over. It became 9.30 p.m. The jamabandi – settlement of land revenue – was to take place tomorrow. So I was writing out the old age pensions, patta and ration cards. My father-in-law had gone for night labour. I had my periods also on that day. I couldn’t even walk, was feeling dizzy. So I decided to take an auto.
வழக்கமாக போகின்ற ஆட்டோவா? வேற ஆட்டோவா?
Was it the auto you took usually? Or was it a different one?
நான் எப்பவுமே நடந்துதான் போவேன். அன்னைக்கு periods சமயம், மத்தியானம் வேறு சாப்பிடலை, தலைசுத்திற மாதிரி இருந்தது. நடக்க முடியலே கீழே விழுந்திருவேனோன்னு பயந்துதான் ஆட்டோல போவோம்ன்னு கிளம்பினேன். ஆட்டோக்காரன் வந்தான், கருப்பசாமி கோயில் திரும்பிய உடனே கூட்டமா அரிவாளோட வந்ததும் ஆட்டோக்காரன் ஓடிப் போயிட்டான். நானும் ஆட்டோவை விட்டு இறங்கப் போனேன். இறங்க முடியலை. எப்பவுமே அந்த இடத்துல கும்பலா ஆள் உட்கார்ந்து இருப்பாங்க. போலீஸ் கிட்ட எத்தனையோ தடவை அங்க ஆள்களை உட்கார விடாதீங்கனு சொன்னோம். உட்கார்ந்துகிட்டு கெட்ட வார்த்தையால பேசுவாங்க, கல்லைக் கொண்டு எறிவாங்க. அன்னைக்கு அரிவாள், கத்தியோட கூட்டமா ஓடி வந்ததும் ஆட்டோக்காரன் ஓடிட்டான். ஆட்டோக்குள்ள வைச்சி வெட்டுனாங்க பேசவே விடலை. வாயை மூடிட்டாங்க, கண்ணைப் போத்திட்டாங்க, வெட்டு அதிகமாக விழுந்தாலே கத்த முடியலை. எட்டரை மன்னிக்கு மேலே எல்லோரும் நாடகம் (டி.வி) பாக்கப் போயிடுவாங்க. நாடகத்திலே மூழ்கிடுவாங்க.
I always walk back. Since it was the time of my periods and I hadn’t eaten in the afternoon, I was feeling dizzy. I couldn’t walk and was afraid I would fall. That’s why I took an auto. The autodriver came. Immediately after turning at Karuppasamy Koil and the gang came with sickles, he ran away. I also tried to get out of the auto. I couldn’t. Always, there is a gang of men hanging around that place. I have told the police so many times, not to let men sit there. They would sit there and use obscene language and hurl stones at people. That day, when they came running with sickles and knives, the auto driver ran away. They hacked at me as I sat inside the auto. They didn’t let me talk. They shut my mouth and eyes. They were hacking at me so badly, that I couldn’t scream. It was past eight thirty, so everyone would have gone to watch the drama (T.V.). They would be lost in the drama.
அதுக்கு முன்னால உங்களைத்தான் வெட்டப் போறோம்ன்னு ஏதாவது சொன்னாங்களா?
Before the incident, did they say anything about attacking you?
அப்படி சொல்லலை. சொல்லியிருந்தா உஷாரா இருந்திருப்போம். ஜாக்கிரதையா இருந்திருப்போம். எங்க வீட்டுக்காரரைத்தான் வெட்டுவேன்னு சொல்வாங்க. ரோட்லே வைச்சி வெட்டுவோம்ன்னு சொன்னாங்க. கடைசியில அவரை இங்கிருந்து மாற்றம் பண்ணிட்டாங்க. என் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு இல்லை. தலைவர் ஆனதில் இருந்த பிரச்சனை. அவங்க சொல்ற எல்லாத்துக்கும் சரின்னு ஜால்ரா அடிச்சிட்டு போயிருந்தா நல்லா இருந்திருக்கும் எந்தப் பிரச்சனையும் வந்திருக்காது. கள்ளத்தனம் பண்றதுக்கு, யாரையும் எதையும் தின்ன விட மாட்டேன் அதுதான் பிரச்சனை. நான் தேர்தலில் சுயேட்சையாகத்தான் நின்றேன். ஆதித்தமிழர் பேரவைன்னு இருக்கிறதே பதவி ஏற்ற பிறகு தான் தெரியும். எங்க சமுதாயம்ன்னு லேசா போவேனே தவிர பெரிய அளவில் இல்லை.
They didn’t say that. If they had, we would have been cautious. We would have been careful. They only said that they would attack my husband. They said they would cut him down on the road. Finally, he was transferred. My children have no protection. From the time I became president, there have been problems. If I had said ‘yes’ to everything they said and went along, playing the accompaniment, things would have been fine. There would have been no problems. I won’t let anyone do any thievery, I won’t let anyone eat up anything. That was the problem. I had stood in the elections as an independent candidate. I had learnt of the existence of the Athithamilar Peravai only after taking up my post. Since they were of my community, I would go along a little but not much.
ஊர் மக்கள் ஆதரவாக இருப்பாங்க நீங்களே அவங்கிட்ட கேட்டுக்குங்க. நல்லா ஒத்துழைப்பு கொடுப்பாங்க. இடையில் நாடார் சமூகத்துக்கும் ஒரு சண்டை வந்தது. 2008-இல் சரோஜினி நாயுடு அவார்டு சோனியா அம்மாகிட்ட வாங்க டெல்லி போயிருந்தப்ப சாதி சண்டைல விடலைப் பசங்களுக்குள்ளே சண்டை. தட்சணம்மாள் நாடாரோ ஒரு நாடார் அந்த சண்டைல எங்க சாமிய அடிச்சிட்டாங்கன்னு பிரச்சனை. அந்தப் பிரச்சனை நடக்கும்போது நான் டெல்லி போயிட்டேன். நான்தான் அந்த சண்டையைத் தூண்டிவிட்டேன் என்று என்னைப் பிடிக்காதவங்க சொல்லி, அந்த சாதிச் சண்டை விஸ்வரூபம் எடுத்துட்டு என்னதான் சரிசெய்து வைத்தாலும் அப்பப்ப இது புகைஞ்சிகிட்டே இருக்கும். (அருகில் இருந்த மகள் புவனேஸ்வரி: இப்ப கொடையில் கூட பிரச்சனை வந்தது. சும்மா இருந்த அம்மாவை எப்படி நீங்க இங்க வரலாம் எங்க கோயிலுக்குன்னு கேட்டாங்க. வேணி தொடர்கிறார்) மட்டமா மட்டமா அம்மணக்குண்டி அப்படி இப்படின்னு லேடீஸை கேவலப்படுத்துறாங்க. யாரு மேடம் சம்மதிப்பாங்க. இதுக்கெல்லாம் நாங்க பொறுப்பாக முடியுமா. பிரச்சனை வந்தது.
The people will support me, go and ask them. They would co-operate well. In between, there was a quarrel with the Nadar community. In 2008, when I had gone to Delhi to get the Sarojini Naidu Award from Sonia madam, there had been a quarrel among the adolescent boys during a caste-clash. It became a problem when Thatchanammal Nadar or some Nadar hit our god during the fight. I had gone to Delhi during this time. People who didn’t like me said that I was the one who had instigated the clash. Then that clash took on monstrous forms, and, however, much we tried to set things right, it kept smouldering. (Her daughter Buvaneswari is nearby and adds: Now there was a problem with the festival too. My mother was not doing anything and they came and asked her, how can you come to our temple? Krishnaveni continues) They would use such filthy debasing language, they would call the women ‘naked bottomed’, this, that. Who would accept such things, madam? Can we be responsible for these things? Problems came.
அதிகளவு உங்க பதவிக் காலத்தில் தொந்தரவு பண்ணது யாரெல்லாம்?
Who were the people who caused the most problems during your term?
இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த சுல்தான். ஓடைப் பிரச்சனையில் சுப்பு போன வருஷத்துல இருந்து ரொம்ப தொந்தரவு பண்ணினாங்க. அப்புறம் நாடார் தான். நான் சொந்த ஊர் நாகர்கோவில் பக்கம். இங்குள்ள மக்கள் எல்லாருமே நாடார் வீடுகளுக்கு கல்யாண வீட்ல இலை எடுத்துப் போடுவாங்க. சுடுகாட்டுல குழி வெட்ட போவாங்க. இப்படி நாடார் சமூகத்துக்கு வேலை செய்வாங்க. நான் பதவிக்கு வந்ததும் அதுபோல வேலைகளுக்கு போக விடமாட்டேன். ஓடை தள்ற வேலை பார்க்கறதாலே இப்ப போக மாட்டாங்க. இது அவங்களுக்கு தாங்கலை. கோபம்.
Sulthan, who belongs to the Muslim community, only. In the problem of the canal, Subbu has been giving a lot of problems from last year. Then the Nadars. My native place is near Nagarcoil. All the people here go to the Nadar houses during weddings and remove the leaves that people have eaten from. They would go to dig holes in the cremation ground. They would do work for the Nadar community. After I took my post, I don’t let them go for such work. Since they do the canal digging work, they don’t go. Those people can’t stand this. They’re angry.
சுல்தான் ஒரு தடவை தேசிய வேலை வைப்பு உறுதித் திட்டத்தில் ஓடையில வைச்சி வேலை நடக்கும்போது அங்க அம்மணமா வந்து நின்னாரு. இப்படி வந்து நின்னா பொம்பளைங்க எப்படி நிப்பாக. அதுக்குக்கூட போலீஸ் எந்த நடவடிக்கையும் இல்லை. போலீஸ் காசு கொடுத்தா அவங்க பக்கந்தான் நிக்கும். அப்போ டி.பி.எம். மைதீன்கான் இருந்தார். அவர்ட்ட சொன்னேன். பூங்கோதை அம்மாட்ட சொன்னேன். நான் சுயேச்சையா நின்னேன். ஆனால் நான் ஆ.இ. அ. தி.மு.க. சார்பாக நிக்கிறேன்னு சொல்லி அந்தம்மாவையும் நடவடிக்கை எடுக்க விடாமல் ஆக்கிட்டாங்க. கருப்பசாமி பாண்டியனையும் பார்த்தேன். கஷ்டப்பட்ட சமூதாயத்தில இருந்து யாரும் வரக்கூடாதுன்னு நெனைக்கிறாங்க. கழிப்பறையை கட்டுறதை எதிர்த்து சுப்பு கோனார், அவருடன் சேர்ந்து மீரான், சுல்தான், எல்லாம் மிரட்டினாங்க. நாங்க முறையா அணுகினோம். RDOவிடம் கேட்டோம், தாசில்தாரிடம் கேட்டோம். இடம் இருந்தா தாராளமாக கட்டுங்க. இடம் முடிவு செய்தது மக்கள் தான். கோனார் ஆசாரி தேவர் எல்லா சாதியையும் சேர்ந்து தான் முடிவு பண்ணாங்க. இவர் சுப்பு கோனார் இடம் முக்கால்வாசி புறம்போக்கை பிடிச்சி வைச்சிருக்காரு. அதனாலதான் அவருக்கு இது புடிக்கலை.
Once when the National Rural Employment Guarantee scheme work was going on in the canal, Sulthan came and stood naked there. If he comes and stands like this, how will the women stay there? For that, too, the police did not take any action. If they give money to the police, they will be on their side only. T.P.M. Maideen Khan* was in the government then. I told him. I told Poongothai* madam. I had stood as an independent. They told her that I had stood on behalf of the A.I.A.D.M.K. and made sure that she didn’t take any action. I went and saw Karuppasamy Pandian** also. They think that noone from the struggling communities should come forward. Subbu Konar, with him, Meeran and Sulthan, all threatened me against building a toilet. We went about it formally. We asked the RDO, the Tahsildar. They said, if there is place, go ahead and build. The people only decided the place. Konar, Asari, Thevar – all the castes came together and decided. Subbu Konar’s land is mostly encroaching on poromboke lands. That’s why he didn’t like it.
*Ministers in the DMK government of 2006-11
**DMK Member of the Legislative Assembly in the same period
(அவரால் தொடர்ந்து பேச முடியவில்லை. கடைசியாக அவர்,) நான் ரொம்ப தைரியசாலிங்க. ஆனால் பொம்பளைன்னு பாக்காம இப்படி தாறுமாறா வெட்டுனதுக்க அப்புறம் எனக்கு ரொம்ப பயமா இருக்கு. இனிமேல் எங்க சமூதயத்துல இருந்த யாராவது பொது வாழ்க்கைக்கு தைரியமா வருவாங்களா? பொம்பளையான என்னை வெட்டும்போது என் கணவர், என் பிள்ளைங்க கதி? என்ன பாதுகாப்பு இருக்கு? ரொம்ப பயமா இருக்கு (என்று கண்ணீர் விட்டு அழுகின்றார்)
(She is unable to continue. Finally she says,) I am a very brave person. But after they have hacked at me blindly, without even caring that I am a woman, I am very afraid. After this, will any person from our community come bravely to public life? If they hack me, a woman, what is the fate of my husband and children? What protection is there? I am very afraid. (She weeps)
***
தாழையூத்து பஞ்சாயத் தலைவர் கிருஷ்ணவேணியின் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலைத் தொடர்ந்து, தலித் பஞ்சாயத் தலைவர்களின் மீது நடத்தப்படும் வன்முறைகளை முன்வைக்கும் வலைபதிவுகளின் மூன்றாம் பதிவு இது. அருந்ததியர் மனித உரிமை அமைப்பு வெளியிட்ட அறிக்கை இங்கே. இந்த சம்பவத்தை தொடர்ந்து எஸ் ராஜ் எழுதிய கவிதை இங்கே.
In response to the brutal attack on Thalaiyuthu Panchayat President Krishnaveni, this is the third of a series of posts about attempts on the lives of dalit panchayat presidents. This attack has hospitalised an award-winning and popular elected leader and underlines the threat that caste poses to democracy. A statement on the attack issued by the Arunthathiyar Human Rights Federation has been reproduced here. A poem about the incident by SRaj is here.