கதைசொல்லி பாமா / Storyteller Bama

In Blog excerpt, Dalit Writing, Interview on June 9, 2011 at 6:28 am

கூடுதமிழ்ஸ்டூடியோவில்  லிவி எழுதியது

Written by Livi at KooduThamizhStudio

முழு கட்டுரையை இங்கே படிக்கலாம். இந்த வலைபக்கத்தில் பாமா சொல்லிய கதைகளின் ஒலிப்பதிவையும் கேட்கலாம்.

Read the full essay in Tamil here. You can also listen to the audio of Bama telling a few stories in Tamil by scrolling down this page.

One of Bama’s stories has been translated into English and published in the Little Magazine. Here is an introduction to Bama by her translator Lakshmi Holmstrom.

“பாரச்சிலுவையை
சுமக்கவும் வேண்டும்
கல்லிலும் முள்ளிலும்
இடறல் படவும் வேண்டும்
முகம் குப்புற விழ‌வும் வேண்டும்
கசையடி படவும் வேண்டும்
பனிமலையுச்சிக்கு நடக்கவும் வேண்டும்
இவையனைத்தும் தாண்டுதல்
அறையப்படுவதற்காகவே “

- பானுபாரதி

“The load of the cross
Must be borne.
Stumble, we must,
On stone and thorn,
Fall on our face, we must
Feel the whiplash,
Walk to the peak of snowy mountains.
We cross all these
Only to be crucified.”

-Banubharathi

சாதியென்பதை எதிர்த்து இலக்கியத்தில் வலிகளின் பதிவும், அதை எதிர்கொள்ள ஏற்றுக்கொண்ட துணிவும் முன்னெடுத்த பாதைகளுமே நாளைய வரலாற்றை மாற்றி அமைக்கும். நூற்றாண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்ட தலித்துகளின் வாழ்க்கை பதிவை அவர்கள் போல் காத்திரமாக யாராலும் முன்வைக்க இயலாது என்பதை உணர்த்தியது கருக்கு. மதம் சக மனிதனை நேசிக்கச் சொல்லித்தந்தாலும், எந்த சாதி சார்ந்த மனிதனிடம் அன்பு செலுத்துவது என்பதையும் அதன் நிறுவனம் உட்புகுத்திச் சொல்லித் தரும் என்பதை தெளிவாக்கியது அவர் கன்னியாஸ்திரியாக பூண்ட துறவறம்.

The literature against caste, with its register of pain and the paths that were followed with the courage to face it, will rewrite our tomorrows. Karukku reminds us that none can tell the life stories of dalits with the same rage as dalits whose forebears have been enslaved for centuries. Her experiences as a nun make it clear that even if religion teaches us to love one another, its institutions will interject and tell us to which castes we may show our affections.

பாமாவின் மூத்த சகோதரர் ராஜ் கௌதமன். அவர் தேர்ந்த விமர்சகராக அறியப்படுபவர். சிலுவை ராஜ்சரித்திரம் அவரின் புகழ் பெற்ற நாவல். கருக்கு நாவலில் அவரை கல்வி கற்க ஊக்கப்படுத்தும் அதே அண்ணன் தான். தமையனிடம் இருந்து தான் எழுத்தைப் பெற்றுக் கொண்டீர்களா எனக் கேட்டவுடன்உடனே மறுதலித்தவர் தன் தந்தையிடம் இருந்து தான் எழுதும் திறன் கடத்தப்பட்டிருக்க வேண்டும் என்றார். “என் தகப்பனார் அறியப்படாவிட்டாலும் நாடகங்கள் எழுதுவார், பாடல்கள் இயற்றுவார். எழுத்துத்திறன் ஜீனில் வந்திருக்க வேண்டும் ” என்றார்.

Bama’s older brother is Raj Gauthaman. He is known as a skilled critic. Siluvai Rajasarithram is his famous novel. He is the brother who is mentioned in Karukku as encouraging her to study. So did your writing come to her through her brother? She immediately refutes the suggestion. ‘The skill of writing must have been passed on to me from my father’, she says. “Even if my father was not well-known, he wrote plays and composed songs. The skill of writing must have come through my genes.” she said.

பாமாவின் எழுத்து அவரின் கிராமத்தில் உள்ள மனிதர்களின் வாழ்வியலை அவ்வாறே பதிவு செய்வ‌து. அவர் நாவல் எழுதுவது என்று திட்டமிட்ட வடிவுடன் எழுதாததால் பெயர்களையும் மாற்றாமல் நிகழ்காலத்தில் அழைக்கும் பெயர்களுடனே கருக்கு நாவலிலும் குறிப்பிடிருக்கிறார்.

Bama’s writings documents the life of people in the village exactly as it is. Since, she did not begin writing with the aim to write a novel, names have found place as they are. The names that are used by people currently have found place in the Karukku novel.

…பாமாவும் தான் எழுதிய கருக்கு நாவலால் ஒரு வருடம் பாண்டிச்சேரியில் தன்னுடைய தமயன் வீட்டில் வனவாசம் இருந்திருக்கிறார். அதிகம் படிக்க தெரியாத மக்கள் பிறர் மேலோட்டமாக படித்துச் சொன்னதை அப்படியே கேட்டுவிட்டு ஆத்திரத்தில் கொதித்திருக்கிறார்கள். அந்த நாட்களில் பாமாவின் ஊரைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஒருவர் பாமாக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அவரை கொஞ்ச நாட்கள் ஊர் பக்கம் வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு, அங்கிருக்கும் மக்களை கூட்டாமாகச் சேர்த்து நாவலை வாசித்துக் காட்டியிருக்கிறார். அவர்களின் பட்டப்பெயர்கள் இன்ன இன்ன இடத்தில் தான் உபயோகித்திருக்கிறார். எதையும் அவர் தவறாக எழுதவில்லை என்பதை விளங்கப் படுத்தியிருக்கிறார். அதன் பின்னரே அம்மக்களும் சமாதானம் அடைந்திருக்கின்றனர்.

…Bama too spent a year in exile in her brother’s house in Pondicherry for her novel, Karukku. The people who did not read much had listened to those who had read her work superficially and were enraged. In those days, a man from Bama’s village who had only completed his eighth standard had written a letter to her. He told her not to come near the village for a few days, then he had gathered the people and read the novel to them. He had explained that she was using their nicknames in specific places and that she had not written anything that was wrong. Only after this did the people grow calm.

பாமாவின் ஊரில் திறக்கப்பட்ட ‘அம்பேத்கர்’ சிலைக்கு அவரையும் சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளனர். இன்று ‘கருக்கு பாமா’ எனவே அவர்களால் அறியப்படுகிறார். பாமா இருப்பது அவர்களுக்கு பெருமிதமும் கூட. ‘இப்பொழுதெல்லாம் அவர்களே என்னிடம் வந்து கதைகளைக் கூறி இந்த கதையை எழுது என்று உரிமையுடன் சொல்கிற நிலைக்கு வந்துவிட்டது’ என்றார். ‘இப்பொழுது சுதாகரித்து விட்டேன் பெயரைமாற்றியே எழுதுகிறேன்’ என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

She was also invited as a special guest to open the Ambedkar statue in her village. Today, she is known as ‘Karukku Bama’ by her people. Her existence is a source of pride for them. ‘Nowadays, they come to me of their own accord and tell me stories. It has come to a stage where they tell me, ‘write this story’ with authority’, she said. ‘Now I have learnt and change names when I write,” she said with a smile.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 293 other followers