A poem for Krishnaveni

In Dalit Writing, Political statement on June 27, 2011 at 7:26 am

- SRaj

ஒதுக்குப்  புறமாக ஒடுங்கி கூனிக்  கிடந்த சக்கிலிச்சி
சபையேறி நிமிர்ந்து நின்று  ஊர்ப்பணி ஆற்றுவது
ஜீரணிக்க முடியுமா பரம்பரை ஏவலர்க்கு
அடுக்குமா ஆதிக்க ஜாதிக்கு
பொறுக்குமா நம்மை ஏய்த்துப் பிழைத்து
வயிர் வளர்க்கும் கூட்டத்திற்கு

The Sakkili woman, who once lay crouched in a corner,
Now standing straight on a stage, serving the public,
Will those who have ordered us for generations digest this?
Will the dominant castes tolerate it?
Will the crowd that survives and fills its stomach
By ordering us around stand for it?

ஊரை விற்று உலையில் போட
சுயநல கூட்டம் போட்ட  தாளத்திற்கு
ஆட மறுத்து உன் உயிரை பணயம் வைத்து
திமிறி எழுந்து திறம்பட பம்பரமாய் மக்கள் பணியாற்றி
மாதிய குலத்து  வேணி  வீராயி நீ பெற்ற விருதுகள்
கண்களை கட்டை கொண்டு உருத்தியதோ

To sell the town and toss it into the fire
The selfish crowd beat out a rhythm
That you refused to dance to, placing your life on the line,
You threw them off, stood up and skillfully, busily, served the people
The awards you won, brave goddess of the female clan,
Were they as logs poked into their eyes, to annoy them so?

பெண் என்றால் பேயும் இரங்கும் என்பர்
ஐந்து ஜாதி  வெறி பிடித்த மிருகங்கள்
பெண் ஒருத்தி உனை சுற்றிவளைத்து
மேனியை ஆயுதத்தால் வெட்டி  பிளைந்து குதறி
கொலைவெறி தாக்குதலை நடத்தி
குற்றும்  குலை உயிருமாக இரத்த வெள்ளத்தில்
தங்கை நீ மிதந்த பத்திரிக்கை  செய்தி பார்த்து
படபடத்து பதரிவிட்டோம் உன் அண்ணன் நாங்கள்

For a woman, even the spirits show pity, they say.
Those five animals possessed with casteist rage
Surrounded you, a lone woman,
Hacked, split open and ripped you with weapons,
Attacking you with murderous intent,
They left you barely alive, floating on a flood of blood,
Our sister, when we read of this in the news,
We, your brothers, were flustered, stunned, troubled.

இந்த மிருகங்களின் முகங்களிலே
காரி உமிழ்ந்தால் கூட நம் எச்சில் தான் வீணாகும்
ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்டி
நீதித்துறை  நீதி வழங்கவில்லை எனில்
நம் நீலப்படை நீதிவழங்கும் என அண்ணன் அதியமான்
கூறியதை நீ சிந்திய செங்குருதியின் மீது
அணையிட்டு கூறுகின்றோம்.

Even if we should hawk and spit upon the faces
Of these animals, only our spit will be wasted.
If the ones who govern us should prove indifferent
If the department of justice does not provide justice
Our blue army will provide justice, said our brother Athiyaman,
Upon the blood you have spilt,
We swear that this shall be so.

***

This poem is written for Aathithamilar Peravai www.aathithamizharperavai.com

தாழையூத்து பஞ்சாயத் தலைவர் கிருஷ்ணவேணியின் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலைத் தொடர்ந்து, தலித் பஞ்சாயத் தலைவர்களின் மீது நடத்தப்படும் வன்முறைகளை முன்வைக்கும் வலைபதிவுகளின் இரண்டாம் பதிவு இது. அருந்ததியர் மனித உரிமை அமைப்பு வெளியிட்ட அறிக்கை இங்கே.

In response to the brutal attack on Thalaiyuthu Panchayat President Krishnaveni, this is the second of a series of posts about attempts on the lives of dalit panchayat presidents. This attack has hospitalised an award-winning and popular elected leader and underlines the threat that caste poses to democracy. A statement on the attack issued by the Arunthathiyar Human Rights Federation has been reproduced here.

About these ads

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 379 other followers

%d bloggers like this: