The brief autobiography of Rettaimalai Srinivasan – Part 3

In Dalit Writing, Personal Narrative on August 14, 2011 at 4:25 pm

இந்த புத்தகத்தின் பதிப்புரை இங்கே, அரசாங்கத்தார் அபிப்பிராயம் என்னும் அத்தியாயம் இங்கே.

The publisher’s preface to the book is here, the chapter titled the ‘Government’s Opinion’ is here.

ஜீவிய சரித்திர சுருக்கம்

[மூல பிரதியில் ஒரு வரி சிதைந்துபோயுள்ளது]…காலத்தில் தஞ்சாவுரிலிருந்து வியாபார சார்பாக சென்னை பட்டணம் வந்ததாக என் பெரியோர்கள் சொல்வார்கள்.

[One line missing in the text received]…in this time, my elders say, our ancestors came to Chennai city from Thanjavur for purposes of trade.

நான் செங்கல்பட்டு கிராமங்களிலோன்றில் 1860-ம் வருஷம் பிறந்தேன். கோயம்புத்தூர் கலாசாலையில் நான் வாசித்தபோது சுமார் 400 பிள்ளைகளில் 10 பேர் தவிர மற்றவர்கள் பிராமணர். ஜாதி கோட்பாடுகள் மிக கடினமாய் கவனிக்கப்பட்டன. பிள்ளைகளிடம் சிநேகித்தால் ஜாதி, குடும்பம், இருப்பிட முதலானவைகளை தெரிந்துகொண்டால் அவர்கள் தாழ்வாக என்னை நடத்துவார்கள் என்று பயந்து பள்ளிக்கு வெளியே எங்கேனும் வாசித்துக்கொண்டிருந்து பள்ளி ஆரம்ப மணி அடித்தபிறகு வகுப்புக்குள் போவேன். வகுப்பு கலையும்போது என்னை மாணாக்கர்கள் எட்டாதபடி வீட்டுக்கு கடுகான நடந்து சேருவேன். பிள்ளைகளோடு கூடி விளையாடக் கூடாமையான கொடுமையை நினைத்து மனங்கலங்கி எண்ணி எண்ணி இந்த இடுக்கத்தை எப்படி மேற்கொள்ளுவதென்று யோசிப்பேன். கணக்கர் தொழிலில் தேர்ந்து நீலகிரி என்னும் மலைநாட்டில் ஐரோப்பிய வியாபாரசாலைகளில் கணக்கராக இருந்த பத்து வருடகாலமட்டும் தீண்டாமை என்பதை எப்படி ஒழிப்பதென்னும் கவலை எனக்குள் ஓயாமலிருந்தது.

I was born in one of the villages of Chengelpet in the year 1860. When I was reading in the Coimbatore School of Arts, out of about 400 children, except 10 of them, all of them were Brahmin. The rules of caste were maintained with great strictness. Afraid that the children should find out about my caste, family and the place I live in, if I became friendly with them, I would sit somewhere outside the school, reading, until after the first bell was rung. When classes were dismissed, I would walk as fast as I can home, so that the students wouldn’t be able to keep up with me. Thinking repeatedly about the cruelty of not being allowed to join other children in play, I would grow sad and think about how to overcome this obstacle. I joined the profession of accountancy and worked in European trading houses in the hill country of Nilgiris for ten years and the worry about how to destroy untouchability was constantly with me.

1890-ம் வருஷம் சென்னைக்கு வந்து “பறையர்” என்போரை இதர ஜாதியாரைப்போல் மேல் நிலைக்கு கொண்டுவந்து மதிக்கும்படி செய்வதெப்படி என்று மூன்று வருடமாய் பல ஆராய்ச்சிகள் செய்தேன். தெற்கு நோக்கி ரெயில் மார்க்கமாகவும் பெரும்பாலும் நடந்தும் கும்பகோணத்தில் பாழாக்கப்பட்ட நந்தன் கோட்டை மதில், தோல்காசு நந்தன், கலம்பகம் பாடிய நந்தன், கம்மாளர் கட்டியிருந்த காந்த கோட்டையானது சாம்பவ ராஜகுமாரியால் அழிக்கப்பட்டது, திருநாளைப்போவார் என்னும் நந்தனார் நின்று துதித்த ஊமைகுலக் கரை, அதையடுத்த மடம், திருச்சிராபள்ளி சாம்பவ சாம்பான், தஞ்சாவூர் பிரவியடை சாம்பான் பெரியநாயகி, மாரியம்மை, திருவாரூர் தியாக சாம்பான் முதலானவர்களைத் தகனம்செய்த இடங்களில் கட்டியிருக்கும் திருப்பணிகள், யானையேரும் பெரும்பறையன் சமாதி, அவர் சந்ததியாருக்கு திருவாரூர் தியாக சாம்பான் ஆலயத்திலுள்ள உரிமைகள், அவர்கள் வளவில் ஒரு இரவு தங்கி விசாரித்துக் கொண்டு பல தேவாலயங்களை அடுத்து ஆங்காங்குள்ள இவ்வினத்தவர்களைக் கண்டும் குளிக்கவும் குடிக்கவும் நீரற்று, வசிக்கும் குடிசை நிலையற்று, நடக்க பாதையற்று, பிழைக்க வழிவகையற்று, எங்கு சென்றாலும் தீண்டாமை என்னும் கொடுமைக்காளாகி, வாய்திறந்து பேசினால் அடி படுவதுமான குறை கோள்களைக் கேட்கும் அதிகாரிகளும், ஜாதி இந்துக்களுக்கு அஞ்சி வஞ்சகமாய் நடப்பதுமான ஆற்றொன்ன துன்பத்த்நின்று அவர்கள் படும் துயரத்தை யுனனர்ந்து பூர்வ சரித்திரத்தையும் விசாரித்தறிந்து திரும்பினேன்.

In 1890, I came to Chennai and undertook research for three years on how I could bring those called ‘Paraiyar’ to a higher state, like those of other castes, and make others respect them. I would walk great distances towards the South along the railway line and look at the destroyed walls of the Nandan fort in Kumbakonam, Tholkaasu Nandan, the Nandan who sang the Kalambagam, the Kandha Fort that was built by the Kammalar and wiped out by the Sambava princess, the Oomai Lake by the shores of which the Nandanar called Thirunaalaipovar had sung his praises, the Mutt next to it, the places where Tiruchirapalli Saambava Saambaan, the Thanjavur Saambaan Periyanaayagi, Maariammai, Thiruvarur Thiyaga Sambaan had offered sacrifices and the structures built in those places, the Samadhi of the Perumparaiyan who rode on elephants, the rights that his descendants have in the Thiruvarur Thiyaga Sambaan temple. Staying in these parts for a night, I would inquire about such things, see these people living next to several temples without water to bathe or drink, living in temporary huts, without paths to walk in and without ways to survive, subject to the cruelty of untouchability wherever they went, who were beaten if they should so much as open their mouths and talk, living in fear of officials and caste Hindus and practising deceit out of fear, living in sorrow that cannot be ameliorated, realising the pain they suffered, I would learn of our old history and return.

சர்க்கார் ரிக்கார்டுகளை பரிசோதித்து பார்த்தபோது 1772-ம் வருஷ முதல் இவ்வினத்தவர் பொருட்டாய் அவர்கள் கவலை எடுத்துவந்ததாக காணப்பட்டது. 1818-ம் வருஷம் இவ்வின குடியானவர்கள் முன்னேற்றமடைய வழிவகைகளைத் தெரிவிக்கும்படி கலெக்டர்களை ரேவிநியுபோர்டார்  கேட்டிருந்தார்கள். அது எப்பிடியாயிற்றென்று தெரியவில்லை. 1893 – ம் வருஷம் கல்வி கற்பித்து கொடுக்க தலைபட்டார்கள். 120 வருஷம் தூண்டுவாரற்று இருந்தார்கள். 1893-ம் வருஷம் சர்க்கார் வெளியிட்ட உத்தரவை ஒரு சிலாசாசனமாய் இவ்வினத்தார்கள் எண்ணினாலும் பலிதபடாமல் போய்விட்டது. அதற்கடுத்த படியாகத்தான் 1893-ம் வருஷம் ‘பறையன்’ என்ற பத்திரிக்கையை தூண்டுகோலாக வெளியிட்டேன்.

Looking through the old records of the Sarkar, it could be seen that they have been concerned about these people from 1772. In 1818, the Revenue Board had asked Collectors  to find ways in which these people could be helped to progress. It is not known what became of that request. In 1893, they sought to impart education to these people. They had lain for 120 years with none to care for them. Though these people were enthused by the orders that were issued by the Sarkar in 1893, they did not receive the fruits of it. Next, in 1893, I published ‘Paraiyan’ as a provocation to action.

இந்த ராஜதானியில் பேதைகளாய் இடுக்கன்களுக்குள்ளாகிக் கிடக்கும் கோடிக்கணக்கான மக்கள் மத்தியிலேயே முதன்முதலாக தோன்றி உழைத்து வந்த என் உபகாரத்திர்காக அரசாங்கத்தார் எனக்கு ராவ்சாஹிப் என்னும் பட்டம் 1926-ம் வருஷம் ஜனவரி மாதம் 1-ந் தேதியிலும், ராவ்பஹதூர் பட்டம் 1930-ம் வருஷம் ஜூன் மாதம் மூன்றாம் தேதியிலும், திவான்பஹதூர் என்னும் பட்டம் 1936-ம் வருஷம் ஜனவரி மாதம் 1 -ந் தேதியிலும் மகிழ்ச்சியுடன் அளித்திருக்கின்றார்கள்.

From the many crores of innocents who have been made to stumble upon obstacles within our royal estate, for being the first one to rise and labour for them, the government delighted in giving me the Rao Sahib title on January 1, 1926, the Rao Bahadur title on June 3, 1930 and the Diwan Bahadur title on January 1, 1936.

About these ads
  1. [...] இங்கே. ஜீவிய சரித்திர சுருக்கம் இங்கே [...]

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 345 other followers

%d bloggers like this: