The brief autobiography of Rettaimalai Srinivasan – Part 5

In Book Excerpt, Dalit Writing, Personal Narrative on August 20, 2011 at 3:50 am

இந்த புத்தகத்தின் பதிப்புரை இங்கே, எழுத்தாளரின் முகவுரையும, அரசாங்கத்தார் அபிப்பிராயம் என்னும் அத்தியாயம் இங்கே. ஜீவிய சரித்திர சுருக்கம் இங்கே துவங்குகிறது. அதற்கடுத்து வரும் செய்திகள் – பறையன் பத்திரிக்கையைப் பற்றியும், லண்டன் பயணத்தைப் பற்றியும் உள்ள பகுதிகள் இங்கே

The publisher’s preface to the book is here, the author’s preface and the chapter titled the ‘Government’s Opinion’ is here. The brief autobiography begins here. The next part about the Paraiyan journal and the travel to London is here.

சமூகம்

Society

ஆரியர்கள் நமது தேசத்தில் குடியேறிவந்து ஜாதி கோட்பாடுகள் உண்டாக்கியபோது இப்போது பறையர், பஞ்சமர், ஆதி திராவிடர்களேன்னும்  திராவிடர்கள் இசையாமல் பல துன்பங்களுக்குட்பட்டுகொண்டு தனியே சேரி என்னும் தங்கள் கிராமங்களையுன்டாக்கி கோயில், குளம், குரு, கிராம தலைவர் (நாட்டாண்மைக்காரர்), பஞ்சாயத்தார், வண்ணான், அம்பட்டன், சுடுகாடு, இடுகாடு, விதவாவிவாகம், விவாக சம்மந்த விலக்கு முதலியவையுடன் கிராமங்களில் தனி சமூகமாய் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். தேசாயி செட்டி என்போர் இவர்களுக்குள்ளுண்டாகும் வழக்கை தீர்ப்பதாக பணம் பறித்து போகும் வழக்கம் ஒழிந்துவருகிறது. நான் கண்டித்து வந்திருக்கிறேன். இவர்கள் வெளிப்படையாய் வந்து தங்கள் சுதந்திரங்களை பாராட்டாமல் ஆரியர் ஜாதி கோட்பாட்டுக்குள்ளானவர்கள். இவர்களை யடக்கி வைத்து வந்தார்கள். இவர்கள் தங்கள் உரிமைகளைக் கேட்டு அனுபவிக்கும்படி பெரியதோர் சமூகமாக சேர்க்க முயன்றேன். பத்திரிகையில் வெளியான விஷயங்களையுணர்ந்த இவ்வினத்தவர் தேசமெங்கும் கூட்டங்கள் கூடி தங்களுக்கிருக்கும் இடுக்கண்களைப்பற்றியும் தங்கள் அபிவிருத்தியைப்பற்றியும் பேசி வந்தார்கள். சென்னையில் ‘பறையர்’ மகா ஜனசபை என்ற தலைமைசபை யொன்று ஸ்தாபிக்கப்பட்டது. அதற்கு நானே காரியதரிசியாகவிருந்து நடத்தி வந்தேன்.

When the Aryans settled in our country and created the rules of caste, the Dravidians – who are now called Paraiyar, Panjamar and Adi Dravidar – were subject to much misery for they refused to concede. They lived as a separate society, in a separate space called the Cheri. They created their villages with such things as their temple, pond, priest, village head, panchayat members, washerman, barber, burial ground, burning ghat, and the customs of widow remarriage and divorce. The custom of the Thesaayi Chetti, who would come under the guise of resolving their disputes, snatch their money and leave, is now vanishing. I continue to condemn this practice. Instead of openly celebrating their freedom, they have been absorbed into the Aryan caste rules. Those people have kept them under control. I tried to collect them into a large community, that they may ask for and enjoy their rights. Reading and understanding all that was published in the journal, people of this clan gathered in groups across the nation to talk about the obstacles they faced and their development. In Chennai, a central group called the ‘Paraiyar’ Mahajana Sabha was established. I was the Secretary who led this group.

1895-ம் வருஷத்தில் ஓர் சம்பவம் நேரிட்டது. அதாவது லண்டன் நகரில் சிவில் சர்வீஸ் பரிக்ஷை நடந்து கொண்டிருந்தது. அந்த பரிக்ஷையில் தேருகிறவர்கள் ஆங்கிலேயரே. அவர்கள் தான் கலெக்டர்களாகவும்  ஜட்ஜிகளாகவும் இன்னும் தேசபரிபாலனத்தில் உத்திரவாதமான உயர்ந்த பதவிகளினின்று தேச பரிபாலனஞ் செய்து கொண்டுவந்தார்கள். அந்த பரீக்ஷை இந்தியாவிலும் நடைபெற வேண்டுமென பிரிட்டிஷ் பார்லிமெண்டில் காங்கிரஸ்காரர்கள் ஓர் மசோதா சமர்பித்தார்கள். அந்த பரீக்ஷையானது இந்தியாவிலும் நடந்தால் ஜாதி இந்துக்கள் உயர்தர உத்தியோகங்களை வகித்து ஏழை ஜாதியானவர்களைத் தீண்டாதார் என்று இம்சிப்பார்களென பறையர் மகா ஜன சபையார் சென்னை வெசிலியன் மிஷன் காலேஜ் ஆலில் 1893 டிசம்பர் 23 தேதி ஒரு பெருங்கூட்டம் கூடி அந்த மசோதாவை எதிர் மறுத்து 112 அடி நீளமுள்ள ஒரு மனுவில் 3412 கையொப்பங்கள் சேகரித்து ஜெனரல் சர் ஜார்ஜ் செஸ்னி (Genl. Sir Geo. Chesney) என்னும் பார்லிமெண்டு மெம்பரைக் கொண்டு சமர்பித்தார்கள். அதைக்கண்ட காங்கிரஸ்காரர் தங்கள் மனுவை பின்னித்துக் கொண்டார்கள். அதின்பின் கீழ்தர உத்தியோகங்களிலிருந்து மேல்தர உத்தியோகத்தை வகிக்க யோக்கியதையுள்ளவர்களை நியமிக்கலாமென இந்திய செக்ரடரியார் உத்தரவளித்தார். எதிர் மறுப்பு மனு அனுபந்தம் 1-ல் காண்க.

In 1895, an incident took place. The Civil Services exams were on in London. Only the English would pass those exams. Only they could become Collectors and Judges and hold other high offices to perform tasks of national administration. Members of the Congress submitted a petition to the British Parliament that these exams should be conducted in India also. The Paraiyar Mahajana Sabha gathered as a large crowd at the Chennai Wesleyan Mission College Hall on December 23, 1893, to collect signatures opposing this petition, saying that if those exams were held in India too, the caste Hindus would corner all the high-ranking posts and would torture the poor castes by terming them untouchable. The opposing petition was 112 feet long with 3412 signatures and was submitted to the British Parliament through the Parliament member called General Sir George Chesney. Seeing this, the Congressmen withdrew their petition. After this, the India Secretary issued orders that all those in lower posts can be appointed to higher postings if they have the requisite capacity. (Look at appendix 1 to see the opposing petition)

To be contd.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 293 other followers