சட்டசபை
Legislative Assembly
நான் சட்டசபையைச் சேர்ந்த மூன்று மாதங்களுக்குள் ஒரு தீர்மானத்தை சபை முன்பாக கொண்டுபோனேன். சபையார் ஏகவாக்காய் ஒப்புக்கொண்டார்கள். அதாவது, தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் பொது ரஸ்தாக்கள், கிணறுகள், பொது கட்டிடங்கள், மார்கட்டுகள் முதலியவைகளை உபயோகிப்பது கவர்ன்மெண்டார் கொள்கை.
Within three months of joining the Legislative Assembly, I brought a new resolution before the Assembly. It was accepted unanimously. The resolution made it government policy that those belonging to the Depressed Classes should be able to use public roads, wells, buildings and markets.
மதுவிலக்குவதை ஆரம்பிக்க கருதி வாரத்திற்கொருநாள் ஞாயிற்றுக் கிழமைகளிலும் பண்டிகை நாட்களிலும், கவர்ன்மெண்டார் விடுமுறை நாட்களிலும் சாராயக்கடைகள் மூடப்படவேண்டுமென ஓர் தீர்மானம் சட்டசபை முன்பாக கொண்டுபோனேன். அதைச் சபையார் ஏற்றுக் கொண்டார்கள். சில மாதங்கள் மட்டும் சாராயக் கடைகளை ஞாயிற்றுக் கிழமைகளில் மூடி வைத்திருந்து அதனால் கலால் வருமானம் குறைவுபடுகிற தென்று கவர்ன்மெண்டார் கடைகளை மறுபடியும் வழக்கம் போல் திறந்துவிட்டார்கள்.
With the aim to initiate Prohibition, I brought a resolution before the assembly that the liquor shops should be shut once a week, on Sundays, on festival days, and on Government holidays. The members accepted it. For a few months only, the liquor shops were shut on Sunday. Seeing that their income fell, the Government again let the shops stay open as usual.
எழுதப்படிக்கத் தெரியாத பாமர ஜனங்கள் பத்திரங்களில் கைநாட்டு அல்லது விரல் முத்திரை போட வேண்டுமானால் தாசில்தார்களுக்கு முன்பாகவோ அல்லது அவர்களை போன்ற பொறுப்பாளிகள் முன்பாகவோ சாட்சிகளுக்கு முன் பத்திரத்தில் அடங்கிய விஷயங்களை தெளிவாய் வாசித்து காட்டி கைநாட்டு அல்லது விரல் முத்திரை போடும்படிசெய்து சாட்சிகள் கையொப்பங்களும் செய்யவைத்து மேற்கண்ட பொறுப்பானவர்களும் கையொப்ப மிட்டு பத்திரத்தை பூர்த்தி செய்யவேண்டும். கிராம முநிசீப்புகள் கணக்கர்கள் முன்பாக கைநாட்டு விரல் முத்திரை போடப்பட்ட பத்திரங்கள் செல்லப்படாது என்று ஒரு மசொதாகொண்டு போனேன். அதை கவர்ன்மெண்டார் அங்கீகாரம் செய்யவில்லை.
The ordinary people who did not know how to read or write, if they should have to put a fingerprint in lieu of a signature, it should be done in front of Tahsildars or others of similar responsibility with witnesses. The contents of the document should be clearly read out to them and the fingerprints should then be taken along with the signatures of the witnesses and those of the official present to complete the document. I brought in a petition to this effect, that documents with fingerprints affixed before the Village Muncifs and accountants should not be considered valid. It was not accepted by the government.
முனிசீப்பு, கணக்கர் முதலானவர்களை வம்சபரம்பரை பரியத்தை கொண்டு சர்க்கார் நியமனம் செய்யக்கூடதேன்று ஒரு தீர்மானம் கொண்டு போனேன். அதைப்பற்றி இந்த ராஜதாநியிலுள்ள மேற்படி உத்தியோகஸ்தர்கள் கூட்டங்கள் கூடி வெகு வலுவாய் எதிர்த்திருக்கின்றார்கள். அந்தத் தீர்மானம் இன்னமும் சட்டசபைக்கு முன் வரவில்லை.
I brought in a resolution that the Muncif, accountant and such posts should not be given on the basis of ancestral occupation of those posts. Many high-ranking officials in this region gathered in meetings to vociferously oppose this. This resolution has still not been brought before the Legislative Assembly.
கிராம முனிசீப்பு கோர்ட்களில் குற்றவாளிகளை தொழுவத்தில் போட்டுவைக்கும் சட்டத்தையும், வழக்கத்தையும் எடுபட செய்ததுமில்லாமல் தொழுவங்களைச் சுட்டெரிக்கும் செய்தேன்.
Not only did I ensure the removal of the law and custom that permitted Village Muncif Courts to enclose their prisoners in stables, I also torched these stables.
உப்பு வரி முற்றிலும் எடுபட வேண்டுமென ஒரு தீர்மானம் சபைக்கு முன் கொண்டுவரப்பட்டது. உப்பு விலை மிகக் குறைவாயிருப்பதால் ஏழைகளுக்கு அதனால் கஷ்டமில்லை. உப்பு வரியால் சர்க்காருக்கு வரும் வருமானத்தைக் கொண்டு ஏழைக் குடிகளுக்கு உபகாரம் செய்யலாமென்று நான் எதிர்த்தேன். வரி எடுபடவில்லை. அப்படி எடுபடாததால் இந்திய கவர்ன்மெண்டார் சென்னை கவர்ன்மெண்டாருக்கு பத்து லக்ஷத்திற்கு மேலாக கொடுக்க வேண்டிய ஏற்பாடிருன்தது. அது ஆதி திராவிடர்களுக்கு கவர்ன்மெண்டார் கொடுப்பார்களென எண்ணினேன். அதை வேறு காரியத்திற்கு சர்க்கார் உபயோகித்துக் கொண்டார்கள்.
A resolution had been brought before the assembly to remove the Salt Tax in full. Since the price of salt was very low, it did not harm the poor in any way. I protested the resolution, saying that the Sarkar could use the income from the Salt Tax to help the poor. The Tax was not removed. Since it was not removed, it happened that the Indian government had to give the Madras government more than ten lakh rupees. I thought that the government would give this money for the Adi Dravidar. The Sarkar used it for other purposes.
நிலவரியைக் குறைக்கவேண்டுமென ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. நிலசுவான்கள் சாகுபடி செய்யக் கூடியதற்கு மேலாக விஸ்தீரமான நிலங்களை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்து கவர்ண்மென்டு நிலத்தை சாகுபடி செய்து பிழைக்க ஏழை குடியானவர்கள் மனு செய்து கொண்டால் நீர்பிடிப்பு, மேயகால், மாடுகள் போகும்வழி, பொங்கலுக்கு மாடுகள் சேர்ந்து நிற்குமிடம், ஒரு கல்லை நட்டுவிட்டு எல்லைப்பிடாரியை பூசைசெய்யுமிடம் என்னும் பலவித ஆட்சேபனைகள் செய்து, உழவு உழைப்பாளிகளுக்கு நாளொன்றுக்கு இரண்டு அணு கூலியும் சரிவரக் கொடாமல் தனவந்தாராய் தங்கள் பிள்ளைகளை கல்வியில் தேற்றி பெரும் உத்தியோகச்தராகச் செய்து மேல்மெத்தை வீடுகளிலும் மோட்டார்களில் சுற்றி சுகம் பெற்றிருக்குமிவர்கள் நிலவரி செலுத்த சக்தியற்றவர் களென்றால் எவ்வளவும் ஒப்புக் கொள்ள கூடியதல்ல வென்று பலமாய் எதிர்த்து தாக்கினேன். வரி குறைக்கப்படவில்லை.
A resolution for the reduction of property tax had been brought. Land owners currently land in excess of the area they are able to harvest. These people, if the poor should take the rights to harvest government lands adjacent to theirs, will have several restrictions such as where they can take water, graze cattle, route the cows, have place for the Pongal cows to stand, plant a stone and claim space to worship the boundary deities. These people will not give the poor the meagre wages due to them and lead wealthy lives with their children doing well in education and taking up high-ranking posts, living in houses with upper-storeys and taking their pleasure by driving around in motor vehicles. If these people claim that they do not have the means to pay property tax, it is entirely unacceptable. I opposed the resolution strongly and the tax was not reduced.
சபையின் பல கமிட்டிகளில் வீற்றிருந்தேன். அங்கே நான் பேசிய விஷயங்கள் அநேகம். பல கமிஷன்களுக்கு முன்னால் சாட்சியம் கூறியுமிருக்கின்றேன்.
சட்டசபையில் தாழ்த்தப்பட்ட இனத்தவரான கணம் தங்கிய அங்கத்தோர்கள் தங்கள் தொகுதியில் என்னை தலைவராக தெரிந்தெடுத்து வைத்திருந்தார்கள். பதினைந்து வருடம் சட்டசபையில் வீற்றிருந்தேன். பின்னும் தற்போது நடக்கும் சட்டசபையில் மேல்சபை (Legislative Council) யில் நான் நியமிக்கப்பெற்று வீற்றிருக்கின்றேன்.
I participated in many committees of the Assembly. I spoke on several things. I bore witness before several commissions.
In the Legislative Assembly, the honourable members belonging to the Depressed Classes elected me as their leader for their constituency. I was part of the Assembly for 15 years. Now, I have been appointed to the Legislative Council.
To be contd.
இந்த புத்தகத்தின் பதிப்புரை இங்கே, எழுத்தாளரின் முகவுரையும, அரசாங்கத்தார் அபிப்பிராயம் என்னும் அத்தியாயம் இங்கே. ஜீவிய சரித்திர சுருக்கம் இங்கே துவங்குகிறது. அதற்கடுத்து வரும் செய்திகள் – பறையன் பத்திரிக்கையைப் பற்றியும், லண்டன் பயணத்தைப் பற்றியும் உள்ள பகுதிகள் இங்கே, அதன் பின் வரும் பகுதியில், சாதி வேறுபாடின் துவக்கமும், காங்கிரஸ்காரர் சிவில் சர்வீஸ் பரிக்ஷை இந்தியாவில் நடத்தவேண்டும் என்ற விண்ணப்பத்திற்கு எதிரே புறப்பட்ட மனுவைப் பற்றியும். இந்த மனு இங்கிலாந்திலும் இந்தியாவிலும் ஏற்பட்ட தாக்கத்தைப் பற்றி இங்கே. அதற்கடுத்த ஆதி திராவிடர் சமூகமேற்பட்டது எப்படி, மற்றும் இந்த சமூகத்தவர் கல்விப் பெற்றதை குறித்து.
The publisher’s preface to the book is here, the author’s preface and the chapter titled the ‘Government’s Opinion’ is here. The brief autobiography begins here. The next part about the Paraiyan journal and the travel to London is here, which is followed by the section on the origin of caste and the birth of a petition against the Congress demand to hold the Civil Services exam in India and the impact it has in both England and India. The subsequent chapters are on how Adi Dravida society was formed and how they gained education.