My apologies for this unannounced and unreasonably long silence. Posting will resume with lower frequency than earlier, but I hope to be able to post three to five times a week. The entire brief autobiography of Rettaimalai Srinivasan will soon be available in translation over the next few posts and other personal narratives shall follow. As always, your comments, suggestions and contributions are welcome.
- Malar
மதமாற்றல்
Religious Conversion
இந்துக்கள் அடக்கத்தினின்று தாழ்த்தப்பட்டார் மதமாறவேண்டு மென்று டாக்டர் அம்பேத்கார் பஹிரங்கமாய் பிரஸ்தாபித்தபோது தாழ்த்தப்பட்டார் இந்துக்கள் அடக்கத்திலில்லை தாங்களிருக்கும் மதத்திலிருந்து கொண்டே ஆண்மையான வீரத்துவத்துடன் முன்னேற வேண்டுமென்று உடனே தந்திமூலமாக பிரஸ்தாபித்தேன். இந்துக்கள் அனுசரிக்கும் நாலு வர்ணங்களிலொன்றிலேனும் சேர்ந்திராததால் தாழ்த்தப்பட்டோர் இந்துக்கள் அடக்கத்திலில்லை என்பது வெளிப்படை.
When Doctor Ambedkar announced openly that the Depressed Classes should convert, I immediately announced to him through a telegram that the Depressed Classes did not belong to the Hindu fold and should forge ahead with manly courage from within the religion they are currently in. It is obvious that the Depressed Classes are not encompassed within the Hindu fold, since they do not belong to any of the four varnas that the Hindus observe.
பௌத்த மதம்:- 1882 மாது ஸ்ரீ பிளாவட்ஸ்கி அம்மையையும் கர்னல் ஆள்காட்டு அவர்களையும் நீலகிரியில் தரிசித்து அவர்களுடன் சிலநாள் பழகிவந்தேன். யோகானுபவ சங்கத்தில் சேர்ந்து அதின் தலைவராயிருந்த கர்னல் ஆள்காட்டு அவர்களால் தீக்ஷை பெற்றேன். பௌத்த மதத்தை சீர் தூக்கி அவர் பேசுவார். 1900 வருஷம் அம்மதத்தை தாழ்த்தப்பட்டார் சமூகத்தில் நுழைக்க தொடங்கினார். சமூகத்தில் பிரிவினையுண்டாகுமென அஞ்சி அவரை பத்திரிக்கை மூலமாய் தாக்கினேன். ஒருவரை யொருவர் தான் தோன்றிய தம்பிரான் என்று தற்கித்து கொண்டோம். சிலர் அம்மதம் புகுந்தார்கள். பறையர் என்பதைவிட பௌத்தர் என்பது சிலாக்கியமான தென்று சொல்லிக் கொண்டார்கள். சில இடங்களில் மடங்களைக் கட்டிக்கொண்டார்கள். பறையர் அல்லது ஆதி திராவிடர்கள் என்னும் சமூகத்தவர்களுக்கு கல்வியிலும் பொருளாதாரத்திலும் சர்க்கார் கொடுக்க ஏற்படுத்தியிருக்கும் உதவி பௌத்த மதத்தறாய் மாறிய சமூகத்தவர்களுக்கு கிடைக்கக்க்கூடாததாயிற்று.
Buddhist faith: In 1882, I spent some time in the company of Madam Blavatsky and Colonel Olcott in the Nilgiris. I received dheeksha from Colonel Olcott who was the head of the yoga association that he had joined. He would talk highly of the Buddhist religion. In 1900, he began to insert that religion among the Depressed Classes. Fearing that this might lead to splintering this community, I attacked him through journals. We declaimed each other as a self-proclaimed messiah. Some entered that religion. They said that Buddhist is more honourable term than Paraiyar. They built monasteries in some places. It became impossible for those who had converted to claim the benefits that the government had arranged to give for those of the community known as Paraiyar or Adi Dravidar.
இந்து சமயவாதிகலென்னும் ஜாதி இந்துக்களும் தமிழ் சமயிகலான தாழ்த்தப்பட்டாரும் ஒரே மதசார்பினராவர். ஜாதி இந்துக்கள் செய்யும் கொடுமையை தாளமுடியாமல் தாழ்த்தப்பட்டார் மதமாறிபோகிறார்கள். தௌர்பாக்கிய நிலையினின்று சீர்தூக்க வேணுமென தாழ்த்தப்பட்டார் பல நூற்றாண்டுகளாக முறையிட்டதர்கிணங்கி கல்வியிலும் செல்வத்திலும் விருத்திப்பெற கவர்ன்மெண்டார் பல வருடங்களாக உதவி புரிந்து வருகிறார்கள். தாழ்த்தப்பட்டார் சமூகத்தினின்று மதமாறி வேறு சமூகத்தில் சேர்ந்து கொண்டவர்கள் தங்களை தாழ்த்தப்படாரோடு சேர்த்து உதவ வேண்டுமென விதண்டாவாதம் கவர்ன்மெண்டாரிடம் தொடுத்திருக்கிறார்கள். கவர்ன்மெண்டார் சட்டபடி சமூகங்களின் வரையரையேற்பட்டிருக்கிறது ஒரு சமூகத்தவருக்கு கவர்ன்மெண்டார் கொடுத்த உதவியை மற்றொரு சமயத்தார் பெற கூடாது.
Those of the Hindu faith, known as caste Hindus, and those of the Tamil Depressed Classes are of the same religion. Unable to bear the cruelties of the caste Hindus, those of the Depressed Classes convert to other religions. The Government has been providing assistance for many years now in order that they may prosper in education and wealth in compliance with a centuries-old plea from the Depressed Classes that they be lifted up from their degraded state. Those who have joined other religions after conversion from the Depressed Classes are now stubbornly insisting that they be given the same assistance. In accordance with law, the Government has drawn up a list of communities and it cannot give to a community the assistance that it provides to another.
ஒரு மதத்தினின்று வேறொரு மதத்திற்கு மாறினால் ஒரு சமூகத்தினின்று வேறொரு சமூகத்திற்கு மாறினவர்களாவார்கள். அவர்கள் முன்னிருந்த சமூகத்திற்கு கிடைத்த உதவியை மாறியிருக்கும் சமூகத்தினின்று பெறக்கூடாது. அப்படி பெறச்செய்தால் மதமாறியவர்களே முழு உதவியையு மேற்றுக் கொள்வார்கள். அன்றியும் தங்கள் மதமாற்றம் சூட்சியுமுண் டாகுமென தாழ்த்தப்பட்ட சமூகத்தார் பீதி கொள்ளுகிறார்கள். மதமாறி வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தனிப்பட தங்களுக்கு வேண்டிய உதவியை சர்க்காரிடமிருந்து பெற்றுக் கொள்ளுவது உத்தமம். இந்தக் கருத்தைக் கொண்டு சட்ட சபையில் பலதரம் பேசியும் பத்திரிகைகளுக் கெழுதியும் வருகிறேன்.
Those who convert from one religion to another are those who have converted from one community to another. They cannot claim the assistance they received as former members of that community. If this assistance is extended to them, those who have converted as likely to claim all of the assistance that is available. Besides that, members of the Depressed Classes worry that their conversion will prove detrimental to them. It is best if those who have converted to another community are provided assistance that is due to them from the Government separately. I have continued to speak this belief in the Legislative Assembly and write about it in the newspapers several times.
இந்திய காங்ரஸ்
1884 சென்னையில் அடையார் என்னுமிடத்தில் தியாசாபிக்கள் சொஸயிட்டி என்னும் யோகானுபவ ஞான சங்கத்தின் வருஷாந்தர உற்சவம் நடந்தது. சங்கத்தில் நானும் ஓர் அங்கத்தினர். அந்த உற்சவத்திற்கு வங்காள பாபுகளும், பம்பாய் பார்சீகளும், நமது மாகான பிராமணர்களும், ஐரோப்பா, அமெரிக்கா, இலங்கை முதலான தேசங்களிலிருந்து பலரும் வந்து கூடினார்கள். நானும் போய் கூடினேன். கர்னல் ஆல்காட் என்பவர் சங்கத்தின் தலைவர். அப்போது வங்காள பாபுகள் ஒரு ஆலோசனை செய்தார்கள். அதாவது இந்தியர்கள் இம்மாதிரியாகக்கூடி அரசியல் விஷயமாய் ஒரு சபை நடத்த கூடுமென்பது. அவர்கள் கல்கத்தா திரும்பியபிறகு இந்திய காங்ரஸ் என்பது 1885-ம் வருஷம் ஏற்பட்டது. இந்த காங்ரஸ் உற்பத்தியானதற்கு காரணஸ்தர் அவர்தானென்று கர்னல் ஆல்காட் தன்னை சொல்லிக் கொள்வார்.
Indian Congress
In 1884, in a place called Adyar in Chennai, the annual celebration of an association for yoga and enlightenment called the Theosophical Society was in progress. I am also a member of this Association. Many people including Bengali babus, Bombayee Parsis, Brahmins from our Presidency, and many from Europe and countries such as America and Sri Lanka had come for the celebrations. I was there too. Colonel Olcott headed this association. Then the Bengali babus gave some advice – that Indians should gather in a similar association for political reasons. After they returned to Calcutta, the Indian Congress took place in 1885. Colonel Olcott used to claim that he was the reason why this Congress took place.