Archive for the ‘Speech’ Category

தீண்டாமையைப் பற்றி பெரியார் பேசுகிறார் Periyar speaks on untouchability

In Non-Brahmin Movement TN, Speech on May 18, 2011 at 8:36 am

குடி அரசு 1925 – தொகுப்பு 1 – பெரியாரின் எழுத்தும் பேச்சும்,

வெளியீடு: தந்தை பெரியார் திராவிட கழகம், 2003

Kudi Arasu (Republic) 1925 – Anthology 1 – Periyar’s Writing and Speeches,

Published by Thanthai Periyar Dravida Kazhagam, 2003

காரைக்குடி ஜில்லா முதலாவது அரசியல் மகாநாடு
முடிவுரை

Karaikudi District First Political Conference

Concluding remarks


இப்படி நமது நாட்டில் தீண்டாமை, பார்க்காமை, பேசாமை, கிட்ட வராமை ஆகிய இவை ஒருவரையாவது விட்டவை இல்லை. ஒருவர் தனக்குக்கீழ் இருப்பவரைத் தீண்டாதவர், பார்க்காதவர் என்று சொல்லுவதும், அதே நபர் தனக்குமேல் உள்ளவருக்கு தான் தீண்டாதவருமாகவும் பார்க்கக்கூடாதவராகவும் இருப்பது வழக்கமாயிருப்பது மாத்திரம் அல்லாமல், இவர்கள் இத்தனை பேரும் சேர்ந்து நம்மை ஆளுகிற ஜாதியாயிருக்கிற ஐரோப்பியருக்குத் தீண்டாதவராகவும், இன்னும் தாழ்மையாகவும் இருந்து வருவதையும் நாம் காண்கிறோம். இந்த முறையில் தீண்டாமை என்பதை ஒழிப்பது என்று சொல்வது கேவலம் பஞ்சமர்களை மாத்திரம் முன்னேற்ற வேண்டுமென்பதல்லாமல் அவர்களுக்கு இருக்கும் கொடுமைகளை மாத்திரம் விளக்கவேண்டும் என்பதல்லாமல் நம் ஒவ்வொருவருக்குள் இருக்கும் இழிவையும், கொடுமையையும் நீக்க வேண்டும் என்பதுதான் தீண்டாமையின் தத்துவம்.


So in our country, untouchability, unseeability, untalkability and unapproachability have not left out a single individual. It is not only in practice for an individual to name someone below him as untouchable and unseeable, while the same individual is untouchable and unseeable to one above him – but also to find that they are all untouchable and lowly in front of our ruling caste, the Europeans. In this case, we cannot say that the abolishing of untouchability is solely to bring progress to the Panjamar and to only undo the cruelty that is done to them. The philosophy of untouchability is that we must, every one of us, remove both the abasement and the cruelty that is within us.

இதைச் சொல்கிறபோது ஆ! தீண்டாமை விலக்கா? பஞ்சமரையா தெருவில் விடுவது? அவர்களையா தொடுவது? அவர்களையா பார்பெதேன்று ஆச்சரியப்பட்டுவிடுவார்கள். நம்மில் ஒரு கூட்டத்தாராகிய சூத்திரர் என்று சொல்லிக்கொள்ளும் நாம்,நம்மில் ஒருவன் சூத்திரன் என்று அழைக்கும் போது ஆ! நம்மையா, சர் பட்டம் பெற்ற நம்மையா, ஜாமீன்தாராகிய நம்மையா, லட்சாதிகாரியாகிய நம்மையா, சத்திரம் சாவடி கட்டிய நம்மையா, தூய வேளாளனாகிய நம்மையா, பரிசுத்தனாகிய நம்மையா, உத்தமனான நம்மையா, மடாதிபதியான நம்மையா, இன்னும் எத்தனையோ உயர்குணங்களும், எவ்வித இழிவுமற்ற நம்மையா தேவடியாள் மகன், வைப்பாட்டிமகன், அடிமையென்று அர்த்தம் கொண்ட சூத்திரன் என்று சொல்லுவதென ஒருவரும் வெட்கபடுவதேயில்லை.

When I say this, people will be react with astonishment: Oh! Abolishing untouchability? Should the Panjamar be allowed on the street? Them? How can we touch them? How can we see them? And, yet, one group of us call ourselves Shudra. When one of our own calls us Shudra, we are not ashamed by this thought: Oh! We who have been given the title of ‘Sir’, we who are zamindars, lakhpatis, we who have built rest houses for travellers, we who are pure Vellala, we who are saintly, chaste, religious leaders, and who possess so many high qualities, who are without any blemish…are we to be called children of Devadasis and mistresses and be named slaves – for that is the meaning of Shudra – we do not feel ashamed in this manner.

பறையன், சக்கிலி முதலியோரை நாம் ஏன் தொடக்கூடாது, பார்க்கக்கூடாது என்கிறோம் என்பதைச் சற்று கவனித்தால் அவன் பார்வைக்கு அசிங்கமாயிருக்கிறான், அழுக்குடை தரிக்கிறான்; அவன்மீது துர்நாற்றம் வீசுகிறது; அவன் ஆகாரத்திற்கு மாட்டுமாமிசம் சாப்பிடுகிறான்; மாடு அறுக்கிறான்; மற்றும் சிலர் ‘கள்’ உற்பத்தி செய்கிறார்கள் என்கிறதான குற்றங்கள் பிரதானமாகச் சொல்லப்படுகிறது. இவற்றை நாம் உண்மை என்றே வைத்துக்கொள்வோம். இவர்கள் பார்வைக்கு அசிங்கமாகவும், அழுக்கான துணிகளுடனும், துர்வாடையுற்றும் ஏன் இருக்கிறார்கள் என்றும், இதற்கு யார் பொறுப்பாளி என்றும் யோசியுங்கள். அவர்களை நாம் தாகத்திற்கே தண்ணீர் குடிப்பதற்கில்லாமல் வைத்திருக்கும்போது குளிக்கவோ வேஷ்டி துவைக்கவோ வழியெங்கே? நாம் உபயோகிக்கும் குலமோ, குட்டையோ, கிணறோ இவர்கள் தொடவோ, கிட்ட வரவோ கூடாதபடி கொடுமை செய்கிறோம். அதனால் அவர்கள் அப்படியிருக்கிரார்கலேயல்லாமல் அது அவர்கள் பிறவிகுணமாகுமா? …நாம் தான் அவர்களின் இந்நிலைக்கு காரனமாயிக்கிறோம்.

சொற்பொழிவு : குடி அரசு 7.6.1925, 21.6.1925, 28.6.1925

முழு உரை இங்கே

If we look at why we name the Paraiyar and Sakkiliar as untouchable and unseeable, we will hear reasons such as: they are ugly to look at, they are dirty, they stink and they eat beef, they cut the meat of cows, some others manufacture arrack – these are the crimes that are prominently listed. Let us even assume that they are all true. If they are ugly, dressed in dirty clothes and of bad smell, think about why they are like this and who is responsible for this state. If we do not give them water to slake their thirst even, where will they find water to bathe or wash their veshtis? We torment them by not allowing them to even touch or approach the ponds and puddles and wells we use. Is that not the reason for their state, rather than some inborn quality?…We are responsible for their present condition.


Speech: Kudi Arasu 7.6.1925, 21.6.1925, 28.6.1925

Follow

Get every new post delivered to your Inbox.

Join 293 other followers