இந்திய காங்கிரசில் மிக தனவந்தம் மேதாவியருமே இருந்து நடத்தி அரசாட்சியை கைப்பற்றவேண்டுமென்னும் நோக்கத்துடன் பேசியும் நடவடிக்கை நடத்தியும் வந்தார்களே யொழிய கோடி கணக்காய் இந்தியாவில் தாழ்த்தப்பட்டும் மிக ஏழ்மைத்தனத்திற்குள்ளாக்கப் பட்டுமிருக்கும் தங்கள் தேசத்தவர்களின் முன்னேற்றத்தை எவ்வளவும் நினைத்தார்களில்லை. அதனால் காங்ரஸ்காரரிடம் வெறுப்பும் எதிர்ப்பும் தாழ்த்தப்பட்டருக்குண்டாகிக் கொண்டிருக்கின்றன. 1894-ம் வருஷம் சிவில் சர்வீஸ் பரீக்ஷை இந்தியாவில் நடைபெறவேண்டுமென பார்லிமெண்டு முன்பாக காங்ரஸ்காரர் கொண்டுபோன மசோதாவை தாழ்த்தப்பட்டார் எதிர்மறுத்து வெற்றிபெற்றார்கள். 45 வருஷங்களாக காங்ரஸ்காரரோடு தாழ்த்தப்பட்டோர் வாதம் தொடுத்து கொண்டிருக்கிறார்கள்.
The Indian Congress is full of highly respectable people who only spoke and act with the sole intention of capturing power and did not think at all of the progress of the many crores of their fellow country-men who live in India in an oppressed state and have been pushed into poverty. This is why hate and opposition to the Congress is emerging among the Depressed Classes. In 1894, the Depressed Classes opposed and defeated the Congress’ petition to conduct the Civil Services exam in India. For 45 years, the Depressed Classes have been continuing the argument with the Congress.
1918- ம் வருஷம் திரு. காந்தி அவர்கள் வெளிக்கிளம்பி அவரும் அவர் சார்பாயுள்ளவர்களும் தீண்டாமையையொழிக்க வேண்டுமென ஜாதி இந்துக்களிடம் இருபது வருஷங்களாய் கிளர்ச்சி செய்து வருவது கானகத்தே பெய்யும் மழை போலிருக்கிறது. திரு. காந்தி அவர்கள் காங்ரஸுக்கு கற்பிக்கும் மேலதிகாரியாக விளங்குகிறார். தீண்டாமையை யொழிக்க வேண்டுமென்று சொல்ல ஜாதி இந்துக்கள் நாதிரும்பியிருக்கிறதே யொழிய அவர்கள் மனம் திரும்பவில்லை. தாழ்த்தப்பட்டாரில் ஒரு சிலர் சொல்லுவது : “தீண்டாமை என்னும் பேய் ஜாதி இந்துக்களை பிடித்தாட்டுகிறது. தாங்களே அதை ஓட்ட முடியாது. நாங்கள் தடியெடுத்தால் ஒரு வருஷத்திற்குள் நாட்டைவிட்டு துரத்தி விடுவோம். கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.” கலகம் கொடிய துன்பத்திற்குள்ளாக்கும். அதினின்று மீள வெகு நாள் செல்லும் என்பேன். விரோதமும், வெறுப்பும், மமதையும் பாவமானவைகள். அரசியல் தந்திரங்களையறிந்து ஆட்சியை கைப்பற்றும் முறையை நாடி உழைப்பதே உபாயம். அதற்கு ஆதி திராவிடர் சமூகத்தை வலிவு செய்யவேண்டும். ஆட்டுக்கடாக்கள் சண்டையில் புகுவதும், ஆடு நனைகிறதென்று குந்தி அழுவதும் மந்தையில் பாய்ந்து கொள்ளையாடுவதுமான ஜாதி இந்துக்களைக் காண்கிறோம். இவர்களை அகட்டியும், பதவிக்கும் பணத்திற்கும் சமூகத்தை வஞ்சிப்பவர் களை வழிப்படவும் செய்யவேண்டும். காங்ரஸ் காரரும் ஜாதி இந்துக்களும் சுயராஜிய முறையில் ஆட்சி நடத்திவருகிறார்கள். இன்னும் பூரண சுயராஜியம் பெற பாடுபடுகிறார்களும். அவர்களதை கைப்பற்றுமுன் எதிர்மறுத்து நின்று ஆதி திராவிடர்கள் தங்கள் சமூகத்தை வலிவுபடுத்தி தீவிரமாக கரையேறவேண்டும். நஷ்டமும் கஷ்டமும் தங்களுக்குண்டாகுமென ஜாதி இந்துக்கள் உணருமட்டும் தாழ்த்தபட்டாருக்கு வழிவிடமாட்டார்கள் என்பது என் அனுபவம். நாம் சமூகத்தை ஆதரித்து சமூக சேவை செய்யவேண்டும்.
In 1918, Mr. Gandhi set forth and, along with his supporters, has been crusading for 20 years to wipe out untouchability, though all their efforts are like rain falling on forests. Mr. Gandhi functions as the supervisor instructing the Congress. The tongues of caste Hindus have turned enough to say that untouchability should be wiped out, though their minds haven’t. Some among the Depressed Classes say that: “The evil spirit called untouchability has taken full possession of the caste Hindus. They will not be able to exorcise it by themselves. If we take up the stick, we will be able to drive it out of the country in a year. If revolution is born, justice will be born.” Revolution will create terrible miseries and, I would say that, it would take a long while to recover from it. Enmity, hatred and arrogance are sinful. It would be more helpful to learn political intrigue and work toward capturing power. For this, the Adi Dravidar community must be strengthened. We see the caste Hindus setting goats against each other, sitting and weeping when a goat is drenched and springing amidst a flock and looting it when necessary. We need to move them aside and bring to heel those who cheat society for power and money. The Congress and the caste Hindus conduct governance in the manner of home rule. They continue to struggle to achieve complete home rule. Before they achieve this, the Adi Dravidar must stand in opposition to them and strengthen their community and bring themselves to shore as rapidly as possible. In my experience, until the caste Hindus realise that doing otherwise would bring loss and difficulty to them, they will not give way to the Depressed Classes. We must engage in social service that supports society.
திரு காந்தி அவர்கள்
திரு காந்தி அவர்களைக் கல்வியாளரும் கனதனவான்களும் எப்பவும் சூழ்ந்திருப்பார்கள். 1895-6- ம் வருஷத்தில் பச்சையப்பன் கலாசாலையிலும் 1902 -ம் வருஷம் கீழ் ஆபிரிக்கா ஜான்ஸிபார் தீவிலும் இவர் உபநியாசத்தைக் கேட்டிருக்கின்றேன். தென்னாப்பிரிகா பீனிக்ஸ் என்னுமிடத்தில் அவர் உபவாசமிருந்து முடிவான பத்தாம் நாள் அவரைக் கண்டேன். என்னை உபசரித்து அன்பு பாராட்டினார். அன்றுமுதல் அவர் சிநேகம் எனக்குண்டாயிற்று. அது 1906 -ம் வருஷத்திலிருக்கலாம். அவர் இந்தியா திரும்பியதும் தீண்டாமையைப்பற்றி கிளர்ச்சி செய்தார். 1920 -ம் வருஷம் ஒரு பஹிரங்க கடிதம் எழுதினேன். அதை ஒரு சிறு புத்தகரூபமாய் பிரசுரித்தேன். வட்டமேஜை மகாநாடு நடந்தபோது பலதரம் சந்தித்தேன். தனித்தொகுதி தாழ்த்தப்பட்டாருக்கு கொடுக்க அவர் உயிர் போனாலும் விடமாட்டேன் என்று வாதம் தொடுத்தார். தாழ்த்தப்பட்டாருக்கு தனித்தொகுதி கொடுக்கப்பட்டது. பூனாசேர்ந்து ஏராவாடா சிறைச் சாலையிலிருக்கும்போது தாழ்த்தபட்டாருக்கு தனித்தொகுதி ஏற்பட்டதால் தன்னுயிரை மாயத்துக்கொள்ளுவதாக உண்ணாவிரதம் ஆரம்பித்தார். சிறைச்சாலையில் மூன்றுதரம் கண்டேன். வாதாடி வெற்றி பெறுவதை இவர் தவிர்த்து உன்னாவிரதமிருப்பது வீரத்தன்மையையிழந்து இரக்கத்தைத்தேட வேண்டியவரானார் என்பதைக் கண்டு என் மனதிறங்கி பூனா ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டேன்.
Educationists and people of high esteem constantly surround Mr. Gandhi. In 1865-6 in Pachaiappan College and, in 1902, in the Zanzibar island in eastern Africa, I have heard his speech. In a place called Phoenix in South Africa, I met him ten days after his fast had ended. He welcomed me with affection. From that day, I had his friendship. That must have been in 1906. As soon as he returned to India, he created a stir about untouchability. In 1920, I wrote an open letter and published it in the form of a small book. I met him several times during the Round Table conference. He said that he would not allow separate electorates for the Depressed Classes even if it would cost him his life. The Depressed Classes were given a separate electorate. He began a fast in the Erawada Jail of Poona saying that he would kill himself because separate electorates had been given to the Depressed Classes. I saw him three times in jail. Instead of winning through argument, he had become a pitiable man, bereft of heroism, by embarking on this fast. Feeling pity for him, I signed the Poona Pact.
அவருக்கு அசரீரி கேழ்ப்பதைப்பற்றி அடிக்கடி பிரஸ்தாபிப்பார். அசரீரி வாக்கை நானும் கேட்டிருக்கிறேன். அநேகர் கேழ்க்கும் அருள் பெற்றிருக்கிறார்கள். அதைப் பிரஸ்தாபிக்கக்கூடாதென்று பத்திரிக்கை வாயிலாய் வெளியிட்டேன். அவர் சென்னை வந்த போது அவருடன் நான் சம்பாஷித்ததைச் சிறு புத்தகரூபமாய் வெளியிட்டிருக்கிறேன். தாழ்த்தப்பட்டார் சார்பாக பல லக்ஷம் கணக்கான பணத்தை வசூலித்து அவர்கள் பிள்ளைகள் கல்விக்காக செலவழித்தார். தீண்டாமையை யொழிக்க பல வருடங்களாக அவர் கிளர்ச்சி செய்துவந்ததும் ஜாதி இந்துக்களின் கல்மனதினின்று நாருரிக்க அவரால் முடியவில்லை. தாழ்த்தப் பட்டாரை ஹரிஜனங்கள் என்று இவர் பெயர்சூட்டி அழைத்துவருகிறார். “ஹரிஜனம்” என்னுமோர் பத்திரிகையும் பிரசுரம் செய்து வருகிறார். அவர் மனம்போனபடி ஏதேதோ எழுதிவருகிறார். அவைகளில் பெரும்பாலும் தாழ்த்தப்பட்டார் அபிப்பிராயமல்ல வென்றே சொல்லலாம். அது தன்னய தேட்டம். அவர் அசரீரி வாக்கைக் கேட்டறியும் அருள் பெற்ற ஒரு நல்ல ஆத்மா!
He would frequently announce that he heard the voices of incorporeal beings. I have also heard such voices. Many have the gift of hearing such voices. I told him openly through magazines that he should not be announcing this. I published my conversation with him during his visit to Chennai in the form of a booklet. He collected several lakh rupees on behalf of the Depressed Classes and spent it for the education of their children. He has not been able to peel a single fibre off the stony hearts of caste Hindus, despite his many years of creating a stir about untouchability. He has named the Depressed Classes Harijans and proceeds to call them by that name. He also publishes a magazine by the name ‘Harijan’. He writes all sorts of things in it as his heart pleases. We can say that most of this is definitely not the opinion of the Depressed Classes. It is a pure quest for self-satisfaction. He is a good soul who has the gift of hearing unearthly voices!
என் இல்வாழ்கை
நான் கடனுக்காளாகமலிருந்து வருவதும், எதிர்த்து பேசாத என்பிராணேசியின் சாந்த குணமும், சமூகத்திற்குழைக்க எனக்கு சாத்தியமாக இருந்தது. இதைச் சென்னை ஓட்டேரி மயானத்தில் அவர் சமாதிக் கல்லில் குறித்திருக்கின்றேன்.
My domestic life
Staying out of debt and my wife’s docile nature that does not allow her to talk back have helped me work for society. I have noted this upon her headstone in the Chennai Otteri cemetery.
…