(புதிய சீர்திருத்தம்) பூனா ஒப்பந்தம்
இந்த ஒப்பந்தத்திற்கு பிறகு மாகாண சட்டசபையானது (மேல் சபை) கவுன்சில் (council) என்றும் (கீழ் சபை) அசம்பிளி (Assembly) என்றும் சென்னையில் அமைக்கப்பட்டிருந்தது.
(New Amendment) Poona Pact
After this pact, the Presidency’s legislative assembly was made into the (upper house) Council and the (lower house) Assembly in Chennai.
கூட்டுத்தொகுதி
அசம்பிளியில் ஒடுக்கப்பட்ட வகுப்பினர்களை இதர சமூக கக்ஷிக்காரர்கள் தங்கள் பக்கம் சேர்த்துக்கொள்ள முயன்றார்கள். அசம்பிளிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 30 மெம்பர்கள் தனியானதோர் கட்சியாயிராமல் அவர்களில் 27 பேர்கள் காங்கரஸ் கட்சியில் சேர்ந்துவிட்டார்கள். இவர்களை தெரிந்தேடுத்தவர்களும் (voters) தெரிந்தெடுக்கப்பட்டவர்களும் (elected members) தங்கள் சமூக சேவை இன்னதென்றும் அதனால் உண்டாகும் பலாபலன்களை கவனியாதவர்களாகவோ தெரியாதவர்களாகவோ நடந்துவருகிறார்கள் என்பதை தெரியாமல் கூட்டு தொகுதியாளுண்டான கெடுதி என்று இச்சமூகத்தவர்களில் பலர் அபிப்பிராயம் கொள்ளலாம். அறியாமையோ வறுமையோ இதற்கு காரணமாகக் கொள்ள வேண்டுமேயொழிய கூட்டு தொகுதியில் மாத்திரமல்ல தனித் தொகுதியினாலும் மேற்கண்ட காரணங்களால் கெடுதியே நேரிடும்.
Joint constituency
In the Assembly, the party members of other castes attempted to pull the Depressed Classes to their side. Of the 30 members who were selected to the Assembly, instead of forming a separate party, 27 of them joined the Congress. Many people of this community may be of the opinion that the behaviour of the voters and the elected members shows that they have either not paid attention to or are not aware of what their duty to their society is and what the benefits of this are. They may feel that this is one of the harmful effects of the joint constituency. We have to believe that it is ignorance or poverty which is the reason, for it is not only in the joint constituency but also in the separate constituency where the above reasons can cause harm.
தனித்தொகுதி
சென்ற 1938 நவம்பர் கார்ப்போரேஷன் தேர்தல் நடந்த போது ஆதிதிராவிடர் சமூகத்திற்கென்று தனித் தொகுதியில் ஒதுக்கிவைத்த ஸ்தானத்திற்கு அபேக்ஷகராக நின்றவர்கள் இதர சமூகத்திற்கும் இதர கட்சிக்கும் நிற்பதாக சொல்லி நிற்க ஆதி திராவிட சமூக (ஒட்டர்கள்) தெரிந்தெடுப்பவர்கள் சம்மதம் கொடுத்து ஆதரித்தார்கள். இதனால் இந்நகரில் கல்வியும், சற்று பொருட்செல்வமும் விதரனையும் தேர்தல் காரியங்களை நன்கரிந்தவர்களும் தங்கள் சமூகத்தை அலட்சித்து இதர சமூகத்தையும் இதர கட்சியையும் ஆதரித்ததாக தெரிய வருகிறது. சமூகத்தவர் செய்யும் குற்றத்திற்கு பூனா ஒப்பந்தம் செய்தோரை நிந்திப்பேன். தேச சரித்திரத்தையும் ஆதி திராவிட சமூகத்தவர் சரித்திரத்தையும் பார்த்தால் ஒப்பந்தத்தில் கண்டிருக்கும் பத்து வருஷங்கள் பத்து நொடிகள் போல் பறந்துவிடும்.
Separate Constituency
When the last Corporation elections took place in 1938, those who contested from the separate constituencies for the Adi Dravidar also claimed to be standing for other parties of other communities and the Adi Dravida voters supported them. We come to know that, in this city, people with some education, wealth and social standing in this city have, without a care for their community, supported those of other communities and other parties. For this crime of the people of this community, I will accuse those who framed the Poona Pact. If we should look at the history of the nation and the history of the Adi Dravida community, the ten years that have been envisaged in the pact will fly past like ten minutes.
நானும் என் சகா அம்பேத்காரும் வட்டமேஜை மகாநாட்டில் வேண்டிய பாடுகள்பட்டு வாக்குரிமைக்கான யோக்கியதை இச்சமூகத்தவருக்கு வெகு சுலபமாய் மட்டுபடுத்தினோம். இவ்வினத்தவர் வாக்குரிமைகளால் சட்ட சபையில் அங்கத்தினவராய் அமைந்த 30 பேரில் 27 பேர் தங்கள் வாக்குரிமைகளை இதர கட்சியாருக்கு பலி கொடுத்து கொண்டிருக்க இச்சமூகத்தவர் கவனியாதிருப்பதை பார்க்க என் மனம் வருந்துகிறது. சமூகச் சேவை செய்வோர் தங்கள் சந்ததி செழிக்க உழைப்போராவர்.
I and my friend Ambedkar undertook the necessary labour, during the Roundtable Conference, to bring voting rights within the reach of this community. My mind is troubled to see that people of this community have not noticed how 27 members out 30 have sacrificed their voting rights to other parties. Those who do social service are those who work to enrich their descendants.
ஆலய பிரவேசம்
தீண்டாமை என்பது இந்தியாவிலிருக்குமட்டும் பூரண சுயராஜிய மேற்படுவது சாத்தியமல்லவென்று ஜாதி இந்துக்கள் உணர்ந்து தீண்டப் படாதவர்களை ஆலயங்களுக்குள் விடுவதாக ஆலயபிரவேசம் என்னும் மசோதா ரூபமாக இயக்கத்தை ஜாதி இந்துக்கள் கவர்ன்மெண்டார் மூலமாக சட்ட சபைகளிரண்டும் அங்கீகரித்து சட்டமேற்படுத்திவிட்டன. பிரிடிஷ் மலையாளம் ஜில்லாவில் இந்து ஆலயங்களில் தீண்டாதாரென்னும் இந்துக்கள் உள்பிரவேசிக்க விட அனுசரிக்கவேண்டிய கிரமங்கள் அந்த சட்டத்தில் கண்டிருக்கின்றன. கூடிய சீக்கிரம் அமுலுக்கு வரும்போலும். அநேக முக்கியமான ஆலயங்கள் ஆதி திராவிட சமூத்தை சார்ந்த பெரியோர்கள் தகனமான இடத்தில் கட்டப்பட்டனவென ‘பறையன்’ என்ற பத்திரிகையிலும் சமீபகாலத்தில் துண்டு பத்திரிகையிலும் பிரஸ்தாபித்திருக்கின்றேன். ஆதி திராவிடர் ஆலயங்களில் பிராமணர் முதலாக சகல ஜாதியாரும் மதஸ்தரும் பிரவேசித்து வணங்கலாம். ஆனால் ஜாதி இந்துக்கள் ஆலயங்களில் தங்களுக்குள்ளடங்கியிருக்கும் நாலு ஜாதியாரைத்தவிர வேறு யாரும் பிரவேசிக்கக்கூடாது.
Temple entry
Realising that complete self-rule is impossible as long as untouchability exists in India, the caste Hindus have brought in legislation through the government to allow untouchables to enter temples. Both Houses have supported it and made it into law. This law includes provisions to allow the Hindus known as untouchables to enter the Hindu temples in the British Malayalam Zilla. Apparently, it will come into force very soon. I have published in the ‘Paraiyan’ journal and in other pamphlets that many important temples are built over the places where prominent members of the Adi Dravida community were cremated. All castes beginning from the Brahmins and people of all religions can worship in the Adi Dravida temples. Yet in the temples of the caste Hindus, except for the four castes they count as their own, none other may enter.
ஜாதி இந்துக்கள் ஆலயங்களை ஆதி திராவிடருக்கு திறந்துவிட்டால் விருப்பமுள்ளவர்கள் பிரவேசிக்கலாம். ஜாதி இந்துக்கள் தங்கள் ஆலயங்களை திறந்துவிட அவர்களுக்குள்ளே ஆலோசித்து தீர்மானித்துக் கொள்ளட்டும். “ஆலயப் பிரவேசம்” என்னும் துண்டு பத்திரிகையில் இதை வெகுவாய் பிரஸ்தாபித்திருக்கின்றேன்.
If the caste Hindus open their temples to the Adi Dravidar, those who desire it may enter. Let the caste Hindus discuss this among themselves and come to a decision about opening their temples. I have spread this far and wide through the pamphlet ‘Temple Entry’.
சனாதனா தருமம் என்பதை நிலை நாட்ட இந்துக்களில் ஓர் பிரிவோர் சென்ற வருஷம் சென்னையில் கூட்டமாய் கூடியபோது ஒரு துண்டு பத்திரிக்கை பிரசூரித்து கொடுத்தேன். அதில் திருச்சிராபுரம் சாம்பவ சாம்பான் என்பவரை ஜம்புகேஸ்வரர் என்றும் தஞ்சாவூர் பிரவிடை சாம்பான் என்பவரை பிரகதீஸ்வரர் என்றும், திருவாரூர் தியாக சாம்பான் என்பவரை தியாக ராஜ பெருமாள் என்றும் பெயர் மாற்றி அவர்கள் தகனம் செய்யப்பட இடங்களில் கட்டியிருக்கும் திருப்பணிகளை கைப்பற்றிக் கொண்டு, மானியம் திரவிய முதலான உரிமைகளை அபகரித்ததுமல்லாமல் சாம்பவ சந்ததியாரை அத்திருப்பணிகளுக்குள் பிரவேசிக்க வொட்டாமல் நீக்கி வைத்திருப்பது தருமமாவென்று கேட்டிருக்கிறேன்.
When a group of Hindus gathered to to establish Sanatana Dharma in Chennai last year, I was distributing a pamphlet. In it I had asked if it was good Dharma to have not only renamed the Thiruchirapuram Sambava Samban as Jambukeswarar, the Thanjavur Piravidai Samban as Biragadeeswarar, the Thirvarur Thiyaga Samban as Thiyaga Raja Perumal, but also to have captured the memorials over the places where they were cremated, grabbed the rights and taxes associated with them and to have denied entry to the descendants of the Sambava to these places.
to be contd.
இந்த புத்தகத்தின் பதிப்புரை இங்கே, எழுத்தாளரின் முகவுரையும, அரசாங்கத்தார் அபிப்பிராயம் என்னும் அத்தியாயம் இங்கே. ஜீவிய சரித்திர சுருக்கம் இங்கே துவங்குகிறது. அதற்கடுத்து வரும் செய்திகள் – பறையன் பத்திரிக்கையைப் பற்றியும், லண்டன் பயணத்தைப் பற்றியும் உள்ள பகுதிகள் இங்கே, அதன் பின் வரும் பகுதியில், சாதி வேறுபாடின் துவக்கமும், காங்கிரஸ்காரர் சிவில் சர்வீஸ் பரிக்ஷை இந்தியாவில் நடத்தவேண்டும் என்ற விண்ணப்பத்திற்கு எதிரே புறப்பட்ட மனுவைப் பற்றியும். இந்த மனு இங்கிலாந்திலும் இந்தியாவிலும் ஏற்பட்ட தாக்கத்தைப் பற்றி இங்கே. அதற்கடுத்த ஆதி திராவிடர் சமூகமேற்பட்டது எப்படி, மற்றும் இந்த சமூகத்தவர் கல்விப் பெற்றதை குறித்து. ரெட்டைமலை ஸ்ரீனிவாசனின் சட்டசபை பணிகள் குறித்து இங்கே. வட்டமேஜை மாநாடைபற்றியும், எம். சி. ராஜா கொண்டுவந்த மசோதாவைப்பற்றியும் குறிப்புகள் இங்கே.
The publisher’s preface to the book is here, the author’s preface and the chapter titled the ‘Government’s Opinion’ is here. The brief autobiography begins here. The next part about the Paraiyan journal and the travel to London is here, which is followed by the section on the origin of caste and the birth of a petition against the Congress demand to hold the Civil Services exam in India and the impact it has in both England and India. The subsequent chapters are on how Adi Dravida society was formed and how they gained education and on Rettaimalai Srinivasan’s service in the Legislative Assembly, followed by brief notes on the Roundtable conference and a legislation brought in by M.C. Raja.


